• Mon. Oct 13th, 2025

வாழைப்பழத்தை ஆபாசமாக சாப்பிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை..!

Byadmin

Dec 13, 2017

வாழைப்பழத்தை ஆபாசமாக சாப்பிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை..!


பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடியிருந்தனர்.

இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷாய்மா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் பாடலின் வரியும் ஆபாசத்தை தூண்டுவதாக பலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த எகிப்து போலீசார் தானாகவே முன்வந்து வழக்கு தொடர்ந்து பாடகியை கடந்த மாதம் கைது செய்தனர். இதுகுறித்து பாடகி ஷ்யாமா தனது சமூக வலைத்தளத்தில், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் அவர் தவறு இழைத்திருப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அநாகரிகமான படத்தில் அவர் நடித்ததற்காக இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *