சவூதியில் 300 சினிமா திரையரங்குகள் !
கடந்த 35 ஆண்டுகளாக சினிமா திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவம் என்றும்,
மக்கமாநகர் உள்ள புனித பூமியில் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் கருதியதால் சினிமா மீதான தடை நீக்கப்படாமல் இருந்தது.
இதேவேளை தீவிரவாத சித்தாந்தங்களை அழித்து, புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் மிதவாத இஸ்லாமிய நாடாக
(Modarate islam) சவுதி அரேபியாவை மாற்றப்போவதாக அண்மையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார்.
இதைதொடர்ந்து, அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது.
இதன் ஒருகட்டமாக, 35 ஆண்டுகளாக சினிமா மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. வெகு விரைவில் தணிக்கை குழு அமைக்கவும் வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2030 வருடத்திற்குள் சுமார் 300 அதிநவீன திரையரங்குகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டுள்ளார்.
2018 முதல் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் விழையாட்ட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கும் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!
குறிப்பு:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் நீ மறுமைநாளை நீ எதிர்பார்.’ என்று கூறினார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு ‘(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 6496)