• Sat. Nov 1st, 2025

கெட்ட கொழுப்பை குறைக்க வாரத்தில் ஒரு நாளாவது வெங்காயத்தாளை இப்படி சாப்பிடுங்க..!

Byadmin

Dec 13, 2017

கெட்ட கொழுப்பை குறைக்க வாரத்தில் ஒரு நாளாவது வெங்காயத்தாளை இப்படி சாப்பிடுங்க..!


வெங்காயத்தாளில் (வெங்காய கீரை) உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அது உடலில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு குளுக்கோஸ் ஏற்புத்தன்மையையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் -டை- சல்பேட்டானது, ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும் உள்ளது.

வைட்டமின் சி, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் தையமின் உள்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *