(இலங்கை கிரிக்கட் அழுகிறது)
ஏன் என்னை இப்படி நாசப்படுத்துகிறீர்கள்.உங்களால் உலகத்தில் எனக்கு அவமானத்துக்குமேல் அவமானம்.
பார்க்கிறவர்களெல்லாம் கைகொட்டி சிரிக்கிறார்கள்.விளையாடமுடியாத கத்துக்குட்டிகளை கொண்டுவந்து பிளயரென்று சொல்லி ஆடவச்சி என்னை அசிங்கப்படுத்துகிறீர்கள்..
ஒருகாலம் உலகமே வியக்கும் அளவுக்கு புகழ்பூத்து,பெயரெடுத்து ஓங்கிவளர்ந்த என்னை குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக மாற்றிவீட்டீர்களே..
ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல் என்பதுபோல் ஆடிவிட்டு அடுத்தவன்மேல் குற்றம்சுமத்தும் இழிநிலை கண்டு அழுகிறேன்.
உலகத்தில் போகும் இடமெல்லாம் ஜெயித்து , மகுடம்சூடி வந்த என்னை ஓரிரு வீரர்களின் ஓய்வுடன் முடமாக்கிவிட்டதன் மர்மம் என்ன?
தற்போது என்நிலை கண்டு வளர்ந்துவரும் வங்காளி நகைக்கிறான்.நேற்றுமுளைத்த ஆப்கானி அடிக்க நினைக்கிறான்.
யானைக்கொரு காலம்வந்தால் பூனைக்கொரு காலம்வரும் என்றுநம்பி பொறுமைகாத்த இந்தியாவும் திரும்பும் பக்கமெல்லாம் வட்டியும்முதலுமாக சேர்த்து அடிக்கிறார்கள்..
சங்கா ,மஹேல ஆகியோருக்குப் பிறகு உங்களால் என்னை சிறப்பாக ஆடமுடியாதா.எத்தனை தடவைகள் அடிவாங்கியிருப்பேன்.ஒன்றா ரெண்டா.? இதற்குமேலும் என்னால் தாங்கமுடியவில்லை. இப்படியேபோனால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
– முகம்மத் அசீம் –