• Fri. Apr 10th, 2026

டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் தாய் பாத்திமா நுஸ்ஹா உயிரிழப்பு. (குழந்தை பிறந்து 40 நாட்களில் சோகம்)

Byadmin

Dec 25, 2017

டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் தாய் பாத்திமா நுஸ்ஹா உயிரிழப்பு. (குழந்தை பிறந்து 40 நாட்களில் சோகம்)

புத்தளம் சோல்டர்ன் விதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பி எம். ஹிசாம் தெரிவித்தார் .

எம். ஏ. பாத்திமா நுஸ்ஹா (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தனது நான்காவது பிள்ளையின் பிரசவம் இடம்பெற்று நாற்பது நாட்கள் கடந்த நிலையில் இவ்வாறு இத்தாய் காய்ச்சலால் பிடிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது மரணம் தொடர்பில் இடம் பெற்ற மரண விசாரணையின் பின்னர் டெங்குவால் ஏற்பட்ட மரணம் எனத்தீர்ப்பை வழங்கி ஜனாஸாவை நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை உறவி னர்களிடம் கையளித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *