(இயேசு குறித்து, முஸ்லிம்களின் நிலைப்பாடு)
-தமீம் அன்சாரி-
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்து குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதை பிற மத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுருக்கமாக…
முஹம்மது நபியை எப்படி முஸ்லிம்கள் இறைவனின் தூதர் என்று நம்புகிறோமோ அதேஅளவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயேசுவும் முஹம்மது நபிக்கு முன்பு இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்று நம்புகிறோம்.
வணக்கத்திற்குரியவன் இறைவன் [கர்த்தர்] ஒருவனே என்று போதித்த இயேசுவை கிறிஸ்தவர்கள் கடவுளாக்கி விட்டனர். முஸ்லிம்கள் இயேசுவை இறை தூதராகவே மதிக்கிறோம்.
மொத்தத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதை விட ஒரு படி மேலாகவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசுவை நம்புகிறோம். நம்ப வேண்டும். இயேசுவை ஒரு முஸ்லிம் மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியே சென்றுவிடுவான்.