(சுதந்திர முன்னணி நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மற்றைய அரசியல் கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளை(28) கைச்சாத்திடப்படவுள்ளது.
அதன்படி, நாளை காலை 10.00க்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் 15 குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை குறித்த கோவையும் நாளை வெளியிடப்படவுள்ளதாக குறித்த முன்னணி தெரிவித்துள்ளது.