• Fri. Nov 28th, 2025

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!

Byadmin

Dec 27, 2017

(உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!)

இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர்.

மேலும், 77 ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *