• Sun. Oct 12th, 2025

மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி

Byadmin

Dec 28, 2017

(மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி)

ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,
மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள்,மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.
திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,
ஏன் நீங்கள் குடிக்கக் கூடாது என அவர் கேட்டார், அதுக்கு இவர் நான் முஸ்லிம் மது அருந்துவதில்லை என சொன்னதும்ஸ அதனாலென்ன? என்றவருக்கு இவர் சொன்னார்,
அப்படியாயின் முதலில் இந்த விமானத்தை ஓட்டும் பைலட்டுக்கு கொடுங்கள் என்றார்.
அதெப்படி அவர் டூட்டியில் உள்ளார், கடமையிலிருக்கையில் மது அருந்தினால் அவர் தவறிழைத்துவிட வாய்ப்புண்டு அதனால் விதி மீற மாட்டார் என்றார்..
நானும் கடமையில் இருக்கிறேன் இஸ்லாமியன் எனும் என் அந்தக் கடமையில் இறைவனுக்கு பயந்து நெறிபிறழாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *