(டிசம்பர் 31 வரை மட்டுமே வாய்ப்பு! மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு)
கிழிந்த மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கடந்த காலங்களிலும் பொது மக்களுக்கு இவ்வாறான அறிவித்தல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.