• Fri. Nov 28th, 2025

இரத்தினபுரியில் ஏற்பட்ட சர்ச்சையின் உண்மை நிலை

Byadmin

Dec 29, 2017

(இரத்தினபுரியில் ஏற்பட்ட சர்ச்சையின் உண்மை நிலை)

23,12,2017 ஆம் திகதி இரத்தினபுரி பொல வீதியில் அமைந்துள்ள கோழிக்கடை வியாபாரிக்கும் ஒரு சில பெளத்த சகோதரர்களுக்குமிடையே ஏற்பட்ட சர்ச்சையின் பின்னர் அந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

2018 ஆம் ஆண்டிற்கான கலண்டர் அடிக்கும் போது பெளத்த சகோதரர்களுக்கு பிரேத்தியேகமாக அவர்களுடைய மத ஸ்தலங்களுடைய புகைப்படங்களுடன் கோழியின் புகைப்படங்களை இணைத்தமையினால் பெளத்த மதத்தை கொச்சைப் படுத்தினார்கள் என்ற சர்ச்சை தான் உருவானது இவ்விடயத்தை பெரிதுபடுத்தி ஒரு இனக்கலவரமாக மாற்றுவதற்கு ஒரு சிலர் முயற்சித்த போதிலும் இரத்தினபுரி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா, முக்கியமான சில முஸ்லிம் வியாபாரிகள், நலன்விரும்பிகள்  ஆலோசனை செய்து நிதானமான முறையில் மேல்மட்டத்தில் உள்ளவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி சுமூகமான முறையில் பிரச்சினையை தீர்த்துவைக்கப்பட்டது .

நேற்று நடைபெற்ற விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட அந்த வியாபாரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தை பொறுத்தவரையில் அல்லாஹ்வின் கிருபையினால் மாற்றுமத சகோதரர்களுடன் அன்று முதல் இன்று வரை வியாபாரம் கொடுக்கல் வாங்கல் இன்ப துன்பங்களில் பங்கேற்றல் போன்ற பல விடயங்களில் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்வதனால் இன்ஷா அல்லாஹ் இனக்கலவரங்கள் உருவாகுவதற்கு மாற்று மத சகோதரர்கள் மற்றும் மத குருமார்கள் ஒரு நாளும் இடமளிக்க மாட்டார்கள் என்பதனை இரத்தினபுரி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா அறிவித்துக்கொள்கின்றது.

Ash sheikh Hasan Rifah (Madani) 
Secretary 
All Ceylon Jammiyathul Ulama 
Ratnapura District Branch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *