(அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அரசியல்வாதிகள் தான். மக்கள் ஒருபோதும் அவ்வாறு செல்ல மாட்டார்கள்)
எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
குணசிங்குபுர புர்வாராம விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இன்றாகும் போது பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளதாகவும், இதனூடாக மக்களுக்கு மிகவும் இக்கட்டான நிலை தோன்றியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.