• Sun. Oct 12th, 2025

2018 ஆம் ஆண்டின் முதல் குழந்தை முஸ்லிம் என்பதால், “தொட்டிலிலேயே இறக்க வேண்டும் என பதிவிட்ட இனவாதிகள்

Byadmin

Jan 12, 2018

(2018 ஆம் ஆண்டின் முதல் குழந்தை முஸ்லிம் என்பதால், “தொட்டிலிலேயே இறக்க வேண்டும் என பதிவிட்ட இனவாதிகள்)

ஒஸ்ரியாவில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி இல் முதலாவதாக பிறந்த குழந்தையின் பெற்றோர்கள் முஸ்லிம்களாக இருந்த தனால், சமூக  இணையத் தளங்களில் பல்வேறு மத வெறுப்புக் கருத்துக்கள் வெளி யிடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஒஸ்ரியாவின் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய வெறுப் புணர்வை நீக்கிய சம்பவம் இடம்பெற் றுள்ளது.

ஒஸ்ரியாவில் புத் தாண்டின் ஆரம்ப மணித்தியாலங்களில் பிறந்த அஸேல் என்ற பெண் குழந்தையினை கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி அலெக்சாண்டர் வென் பெல்லென் வரவேற்றார்.

‘அன்புடன் அஸேலை வரவேற் கின்றேன் என தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ள வென்பெல்லென் பிறக்கும்
ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத் துவத்துடனும், கெளர வத்துடனும் பிறக் கின்றான் என மத வெறுப்பினால் தகாத வார்த்தை பிரயோ கங்களை பதிவிட்டி ருந்தோருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

தந்தையுடன் ஹிஜாப் அணிந்த நிலையில் தாயும் அருகில் இருக்க இந்த ஆண்டின் முதலாவது வியன்னா குழந்தை எனப் பெயரிட்டு உள்ளூர் ஊடகங்களில் அஸேல் தம்காவின் புகைப்படம் வெளி யானதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வெறுப்புணர்வு கருத் துக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியானது.

“தொட்டிலி லேயே இறப்பு நிகழ வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்” என ஒஸ்ரியா பிரஜை ஒருவர் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே  ‘அன்புடன் அஸேலை வரவேற் கின்றேன் என தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்தார்.

-எம்.ஐ.அப்துல் நளபார்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *