• Sun. Oct 12th, 2025

உணவில் அடிக்கடி காளானை சேர்த்தால் இவ்வளவு நன்மையா..?

Byadmin

Jan 24, 2018

(உணவில் அடிக்கடி காளானை சேர்த்தால் இவ்வளவு நன்மையா..?)

காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித்தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக்காலத்துக்கு பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது பட்டன் மஷ்ரூம்’ வளர்ப்பு, குடிசை தொழிலாக மாறிய பின்னர், எங்கும் எப்போதும் தாராளமாக கிடைக்கும் ஓர் உணவுப் பொருளாகிவிட்டது காளான். ஒரு சைவ விருந்தைக்கூட ரிச்சானதாக மாற்றிவிடும் தன்மை இதன் ஸ்பெஷல்.

நம் உணவு பட்டியலில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் காளான் பற்றி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின், புட்சயின்ஸ் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவில், ஒரு தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்ற எந்த உணவைவிடவும் காளானில் அதிகளவு எர்கோதையோனின், குளூட்டோதியோன் போன்ற அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இவை பல்வேறு நோய்கள், உடலை தாக்காமல் பாதுகாக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆன்டிஆக்ஸிடென்ட் உணவுகள், உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை குறைக்கும். இந்த சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம். நரம்பு தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை வராமல் தடுக்கும் வாய்ப்பும் அதிகம். பட்டன் காளானில் வைட்டமின் பி, சி சத்துகளும், செலினியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜின்க் சத்துகளும் நிறைந்துள்ளன. உடலில் நோய்த்தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என இருவிதமாகவும், காளான் உணவுகள் நம் உடலில் செயல்பட்டு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை.

* காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் சத்து, உடலில் உள்ள நச்சுப்பொருள்களின் அளவை குறைப்பதால், புற்றுநோய் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்பு குறைவு.
* காளானில் உள்ள சில மருத்துவ குணங்கள் கிருமி நாசினியாக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் இது, இதயத்துக்கு இதமானது. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

* மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்தை தூண்டும். இதில் உள்ள வைட்டமின் பி சத்துகள், நரம்பு மற்றும் மூளை இயக்கத்தை தூண்டுகின்றன.
* அல்சைமர்’ எனப்படும் முதுமைக்கால மறதி நோய் வராமல் தடுக்கும்.

* ரத்த அழுத்த வாய்ப்புகளை குறைக்கும். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புற செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இந்த பற்றாக்குறையை சமன் செய்ய காளானிலிருந்து கிடைக்கும் பொட்டாசியம், சோடியம் சத்து உதவுகிறது.

* காளானில் இருக்கும் தாமிரச்சத்து, ரத்தநாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்யும். மூட்டுவாதம், கர்ப்பப்பை நோய்களை குணமாக்கவும் உதவும். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இப்படி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்துடன், மஷ்ரூம் கிரேவி, பெப்பர் சில்லி மஷ்ரூம், மஷ்ரூம் டாப்பிங், ஸ்டபிங், மஷ்ரூம் எக் ஆம்லெட் என விதவிதமாக காளானை சமைத்து ருசிக்கலாம். நோய் விலகிப்போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *