• Sun. Oct 12th, 2025

அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 22 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது

Byadmin

Jan 25, 2018
(அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 22 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது)
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் கீழ் 2006ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தொழிலாளர் சேவை 7512 ரூபாயிலும், அமைச்சின் செயலாளருக்கு 30684 ரூபாயிலும் சம்பளம் அதிகரிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது தொழிற்சங்க முன்னணியின் கோரிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு சம்பளத்துடன் இணைப்பட்ட 10000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் 20 வீத கொடுப்பனவும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க சமகால அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய செயற்படுவதாகவும் தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டமையினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக கொடுப்பனவுகள், வாராந்த ஓய்வு கொடுப்பனவு மற்றும் அரச விடுமுறை கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வங்கி அல்லது வேறு நிறுவனங்களில் கடன் பெற்றுக் கொள்ளும் போது, கடன் தொகை அதிகரிக்கப்படும் என சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.dinamina.lk/2018/01/25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *