(வாக்காளர்கள் வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தால் கைது செய்யப்படுவீர்கள்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குள் கையடக்க அலைபேசிகளை பயன்படுத்துதல், வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் என்பவற்றிட்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று (23) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அலைபேசிகளைப் பயன்படுத்தி அல்லது புகைப்படக் கருவிகள் மூலம் வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் சட்டவிரோத செயற்பாடென கருதி கைதுசெய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.