(தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமிப்பு)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் நேற்று(24) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று(24) கையொப்பமிட்டார்.