(இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு)
இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உறுப்பினர்கள் நான்கு பேர் தெரிவாகியுள்ளனர்.
அதன்படி வைத்தியர்களான அநுருத்த பாதெனிய 6254 வாக்குகள், நலிந்த ஜேரத் 5676 வாக்குகள், ஹரிஸ் பதிரகே 5250 வாக்குகள் மற்றும் நவீன் டி சொய்சா 5117 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மேற்குறித்த நான்கு வேட்பாளர்களும் இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா தெரிவித்திருந்தார்.
குறித்த தேர்தலுக்கு மொத்தமாக 13 மருத்துவர்கள் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.