(ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!)
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன், அப்பதவிகளில் இருந்து இன்று (24) ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரியதை தொடர்ந்தே, ஷபீக் ரஜாப்தீன் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்மாந்துறையை சேர்ந்த பேஸ்புக் நண்பர் ஒருவருடன் மெசஞ்ஜர் மூலம் சமகால அரசியல் தொடர்பாக விவாதிக்கும்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் ஷபீக் ரஜாப்தீன் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதனை குறித்த நபர் பேஸ்புக் வாயிலாக அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அவர் மீது பலத்த கண்டனமும் விமர்சனமும் எழுந்திருந்தது.