(ஜனாதிபதி செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்கத் தீர்மானம்)
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த அறிக்கையில் சுமார் 103 பக்கங்கள் குறைவடைந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கேள்வியொன்றையும் எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, முழுமையான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு வழங்காத விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.