(தேர்தல் பாதுகாப்பு_ களத்தில் இராணுவத்தினர்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு அவசியம் ஏற்படின் இராணுவத்தின் உதவி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கால பாதுகாப்பு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் பின்னர், அவசியம் ஏற்படின் இராணுவத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இணங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு இடம்பெறும் மத்திய நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இராணுவத்தினரின் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
எனினும், வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலோ இராணுவத்தினரின் அல்லது விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.