• Sat. Oct 11th, 2025

தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்

Byadmin

Jan 26, 2018

(தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்)

இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை – செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நேற்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் காணப்பட்டதாக லுனுகல பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அங்குள்ள மாணிக்க கற்களை களவாடிச் செல்ல பலர் முயன்று வருவதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாணிக்க கற்கள் மிகுந்த கீனகொட என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணிக்க கல் புதையல் தொடர்பில் ஆபரணங்கள் மற்றும் மாணிக்க கல் அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்க கற்களை பொறுப்பேற்றுள்ள அதிகார சபை, அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே பகுதியில் பெருந்தொகை மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மேலும் பல மாணிக்க கல் புதையல்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *