(மு கா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமனம்)
முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர்நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை, மடவளை நியுசுக்கு அவர் சற்றுமுன்உறுதிப்படுத்தினார்.
மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்தவாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்த நிலையில்அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனைக்கு கடந்த 15 வருட காலமாகதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி வந்தபோதிலும், தற்போதுதான் அந்த வாக்குறுதிநிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள நசீர், 2011ஆம்ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள்பிரவேசித்தார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் தவிசாளராகப் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டவர், அதிலும் வெற்றி பெற்றதோடு,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவிவகித்திருந்தார்.