• Sat. Apr 4th, 2026

மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்

Byadmin

Jan 25, 2018

(மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்)

அநுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அநுராதபுர பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்தமையினாலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும், குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை அநுராதபுரம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *