• Sat. Oct 11th, 2025

யாழ்ப்பாண முஸ்லீம்களிற்கு 700 வீடுகள் அமைக்கப்படும்-விஜயகலா மகேஸ்வரன்

Byadmin

Jan 25, 2018

(யாழ்ப்பாண முஸ்லீம்களிற்கு 700 வீடுகள் அமைக்கப்படும்-விஜயகலா மகேஸ்வரன்)

யாழ் மாநகரசபை தேர்தலில்  13 ஆம் வட்டாரத்தில்  ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாமை ஆதரித்து இன்று(24)     மாலை  பொதுக்கூட்டம் ஒன்று புதிய சோனகத்தெருவில் ஆரம்பமானது.

ஐக்கிய தேசிய கட்சியின்யாழ் மாவட்ட அமைப்பாளரும் மகளிர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சருமான  விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் எமது கட்சி பலம்பொருந்தியதாகும்.ஆகவே யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் மீள்குயேற்றம் என்பது எதிர்காலத்தில் விரைவாக முன்னெடுக்கப்படும்.அமைச்சர் றிசாட் பதியூதீன் ஏற்கனவே 400 வீடுகள் மீள்குடியேற்றம் செய்த முஸ்லீம்களுக்காக கட்டிக்கொடுப்பதாக குறிப்பிட்டார்.

ஆனால் அவருடன் இணைந்து நாமும் 700 வீடுகளை யாழ்ப்பாண முஸ்லீம்களிற்கு அமைத்து கொடுப்போம்.என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *