• Sat. Oct 11th, 2025

நாணயத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை

Byadmin

Jan 29, 2018

(நாணயத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை)

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று,  20 மில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயங்களை வெளியிடவதற்கு,
 மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வட மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும், நாணயக் குற்றிகளுக்குத் தட்டுபாடு நிலவுவதாக, குறித்த மாகாணத்தின் வங்கிகள் அறிவித்துள்ளதை அடுத்து, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ன 10, 5 மற்றும் 2 ரூபாய் நாணயக்குற்றிகளை வடமாகாணத்துக்கு வழங்க, மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் நாணயக் குற்றிகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், வர்த்தக நிலையங்களில் மீதிப் பணத்துக்குப் பதிலாக டொஃபி, தீப்பெட்டி, சொக்லேட் என்பன வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோயில் உண்டியல்களுக்கு நாணயக்குற்றிகளைப் போடுவதாலேயே, வடக்கில் இவ்வாறான தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பித்தளையினால் உருவாக்கப்பட்டுள்ள 5 ரூபாய் நாணயக்குற்றிகளைப் பயன்படுத்தி மாலைகள் செய்யப்படுவதுடன், 10 ரூபாய் நாணயக்குற்றிகளில் மாவட்டங்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அதிகமானோர் அவற்றைச் சேகரித்து வருதாலும், நாணயக்குற்றிகளுக்கு தட்டுபாடு ஏற்படக் காரணமாகியுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *