(3 ஆம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்)
உள்ளாட்சித் தேர்தல்களுக்கான மூன்றாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்றும்(01) நாளையும்(02) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு கூறியுள்ளது.
இம்முறை இடம்பெறும் உள்ளாட்சித் தேர்தலில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 அரச அதிகாரிகள் தபால் மூல வாக்குப் பதிவுக்கு தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.