• Sat. Oct 11th, 2025

புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்துள்ள சாய்ந்தமருது ஜூம்மா பள்ளியின் தோற்றம்…!

Byadmin

Feb 1, 2018

(புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்துள்ள சாய்ந்தமருது ஜூம்மா பள்ளியின் தோற்றம்…!)

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்குமுகமாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய்
நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏலவே, சமூகப் பாதுகாப்பினை ஏற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் முக்கியத்துவம் எனும் விடயத்தை உள்ளடக்கி இவ்வருடம் தரம் 9 மாணவர்களுக்கான குடியியல் கல்வி பாடப்புத்தகத்திலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் படம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் சாய்ந்தமருது மண் இவ்வருடத்தில் முக்கிய பேசுபொருளாக பேசப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் சாய்ந்தமருதை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றமையையிட்டு சாய்ந்தமருது மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதுடன் சாய்ந்தமருது மண்ணை கௌரவப்படுத்திய அரசுக்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *