• Sat. Apr 4th, 2026

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்

Byadmin

Feb 12, 2018

(மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்)

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் இந்த முடிவுகள் தமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தமான துரிதமான பயணமொன்றை தமது கட்சி முன்னெடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல சேவைகள் பலருக்கு இதுவரை தென்படவில்லை எனவும் இந்த சேவைகளின் நன்மைகள் விரைவில் பொதுமக்களை போய்ச் சேரும் எனவும் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

வெற்றி கொள்ளப்படாத மற்றும் தாமதமான கருமங்களையும் மாற்றியமைத்து வெற்றியை நோக்கி செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *