அதிக வேலைப் பழு காரணமாக பலர் காலை உணவை ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. கையில் கிடைக்கும் ஏதோ ஒன்றை உட்கொண்டு விட்டு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். பின்னர் வேலைத்தளத்தில் உள்ள வேலைப் பழு காரணமாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
இது போன்ற அனைத்து விதமான விரும்பத்தகாத நிலைமைகளுக்கு ஒழுங்கான காலை உணவின்மையே முதற் காரணமாக அமைகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மன அழுத்தத்தை போக்கும் அதே சமயம் உடலுக்கும் வலிமையைத் தரக்கூடிய வகையில் காலை உணவை எவ்வாறு தயார் செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
01. 50 கிராம் ஓட்ஸ்
02. 200 மில்லிகிராம் யோகட்
03. ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள்
04. மூன்று மேசைக்கரண்டி உலர் திராட்சை
05. இரண்டு மேசைக்கரண்டி எள்ளு
06. ஒரு தேக்கரண்டி ஈஸ்ட்
07. சிறிதளவு இலவங்கப் பொடி
மேற்குறித்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் உங்கள் காலை உணவாக அந்த கலவையை அப்படியே பரிமாறலாம்.
எமது நரம்புகள் புத்துணர்ச்சியுடன் திகழ்வதற்கு விட்டமின் பி காம்பிளெக்ஸ் அவசியம் தேவை. இந்த விட்டமின் பி காம்பிளெக்ஸ் யோகட்டில் அதிகளவு உண்டு. இதனால் யோகட்டைக் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த உணவை உட்கொள்வதன் மூலம், மன அழுத்தம் மற்றும் பதற்றம் என்பன இல்லாமல் போகின்றது.