(நீங்க பட்டினியாக இருக்காமலே கலோரியை எரிக்கலாம் என தெரியுமா?)
உடலில் உள்ள கலோரியை எரிப்பதென்பது நல்ல விடயம் தான். ஆனால் அதற்கென்ற உடற்பயிற்சிகள் மற்றும் டயட்டிங் போன்ற பல்வேற விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். டயட்டிங்கை பலர் முறையாக செய்வதில்லை. ஆனால் அவ்வாறு டயட்டிங் செய்யாமலேயே கலோரியை எரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இவற்றை செய்தால் கலோரியை இலகுவில் எரிக்க முடியும்.
01. அதிகமாக தண்ணீர் பருகுங்கள்
தினமும் இயன்ற அளவு அதிகளவு தண்ணீர் பருகுவதன் மூலம், உடற் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு உடல் வறண்டு போவது தடுக்கப்படுகின்றது. இதன் மூலம் தேவையற்ற கலோரிகளும் எரிக்கப்படுகின்றது.
02. பழங்கள் மற்றும் யோகட் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளல்
விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் பொதிந்துள்ள ப்ளு பெர்ரி, கொஜி பெர்ரி மற்றும் யோகட் போன்றவற்றை அதிகளவில் உண்ணுங்கள் குறிப்பாக இவற்றை காலை உணவாக உட்கொள்வது மிகவும் சிறந்தது.
03. உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளக் கூடிய பொழுதுபோக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
உங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளக் கூடிய வகையிலான பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சைக்கிளோட்டலை உதாரணமாகக் குறிப்பிடலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தின் போது உடற்பயிற்சி செய்வதைப் போன்று நீங்கள் உணராவிடிலும் உங்கள் உடல் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும்.
04. கோப்பி அருந்துங்கள்
உங்கள் காலை ஆகாரத்தோடு கோப்பி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் கோப்பிக்கு கலோரியை எரிக்கும் சக்தி உண்டு.
05. போதுமான உறக்கம்
உடலின் செயற்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வேண்டுமாயின் போதிய உறக்கம் தேவை. நல்ல உறக்கம் கிடைக்கும் பட்சத்தில் உடலில் உள்ள கூடுதலான கலோரிகள் இயற்கையாகவே எரிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட இந்த வழிமுறைகளை கையாள்வதன் மூலம் கலோரிப் பெறுமானத்தை கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம்.