• Sun. Oct 12th, 2025

உடல்பருமனை குறைந்த செலவில் குறைக்க இதோ அற்புதமான மருந்து…!

Byadmin

Feb 16, 2018

(உடல்பருமனை குறைந்த செலவில் குறைக்க இதோ அற்புதமான மருந்து…!)

உடல்பருமன் பிரச்னை என்பது பரம்பரையாகவும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களாலும் உண்டாகிறது. உடல்பருமனை குறைக்க சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். அது சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.

உடல்எடையை ஆரோக்கியமான முறையில் உணவுக்கட்டுப்பாடு அதனுடன் கூடிய உடற்பயிற்சி ஆகியவற்றால் குறைப்பது தான் சரியான தீர்வை தரும். அதனால் உடல்பருமனைக் குறைப்பதைப் பொருத்தவரை முறையான டயட் மற்றும் இயற்கை வழிகள் அவசியம்.

நம்மில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும். அப்படிப்பட்டவர்கள் காபியுடன் சேர்ந்து இந்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பேஸ்ட்டை கலந்து குடியுங்கள். உடலி்ன மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை கடகடவென வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – முக்கால் கப்
பட்டை – அரை டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – அரை கப்

செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு ஊறவைத்து, மூன்று நாட்களுக்கு காலை வெயிலில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலையில் காபி குடிக்கும்போது இந்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து காபியில் கலந்தும் குடிக்கலாம்.

அப்படியே சாப்பிட விருப்பமுடையவர்கள் அப்படியு ஒரு ஸ்பூன் எடுத்தும் சாப்பிடலாம்.

பட்டை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதனால் உடல் எடை கணிசமாகக் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *