• Sun. Oct 12th, 2025

மருத்துவ குணம் நிறைந்த கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாம்!

Byadmin

Feb 21, 2018

(மருத்துவ குணம் நிறைந்த கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாம்!)

கற்றாழை என்பது மருத்துவ குணம் நிறைந்த ஒரு தாவரம் ஆகும். அதுமட்டுமன்று, கற்றாழையை வீட்டு வாசலின் முற்பகுதியில் வைத்திருப்பதும் வீட்டிற்கு சிறந்தது என்பார்கள் எம் முன்னோர்கள்!

இந்த கற்றாழையை பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலத்திலிருந்தே இந்த கற்றாழையின் பயன்பாடு அதிகளவில் இருந்துள்ளது.

அது சரி, கற்றாழையை உபயோகித்து எந்தெந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இப்போது பார்ப்போம்!

01. நகச்சுற்று குறையும்
கற்றாழையுடன், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து சூடு செய்து, இலேசான சூட்டில் நகத்தின் மீது பூசினால், நகச்சுற்று வலி குறையும்.

02. சிறுநீர் எரிச்சல் குறையும்
சிறுநீர் கழிக்கும் போது ஒருவித எரிச்சல் குணத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கற்றாழைத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குறையும்.

03. வயிறு வலி நீங்கும்
பனங்கற்கண்டு, கற்றாழைத் துண்டு, வெங்காயம் மற்றும் விளக்கெண்ணெய் என்பவற்றை சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வயிறு வலி உடனே குறையும்.

04. முடி கருமையாக வளரும்
நெல்லிக்காய் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றை கற்றாழை சாற்றுடன், கலந்து காய்ச்சி கூந்தலில் தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *