• Sun. Oct 12th, 2025

படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

Byadmin

Feb 21, 2018

(படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?)

முதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான். பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகி அதற்கு உரிய தீர்வினை நீங்கள் காண வேண்டும். வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை.

ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் பாஸிடிவான ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.

பட்டை படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த தீர்வை தரும். பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள். வீட்டில் முயன்று பாருங்கள்.

நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.

அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது. வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் தரலாம். எல்லா வகையான உணவுகளிலும் வெல்லத்தை கலந்து கொடுப்பது உகந்த பலனைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *