• Sun. Oct 12th, 2025

உடல் எடையைக் குறைக்க வெள்ளைப்பூண்டு மட்டுமே போதும் என்றால் நம்புவீர்களா?

Byadmin

Feb 23, 2018

(உடல் எடையைக் குறைக்க வெள்ளைப்பூண்டு மட்டுமே போதும் என்றால் நம்புவீர்களா?)

இன்றைய நவீன உலகில் வாழும் பலர், வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். அதனால், சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களை கடைபிடிக்கத் தவறுகின்றனர். இறுதியில், சம்பாதித்த பணம் முழுவதையும் வைத்திய செலவுக்கு செலவழிக்க நேரிடுகின்றது.

சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளல் என்பவற்றால் உடல் பருமனும் அதிகரிக்கின்றது. உடல் பருமனாதல் பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றது.

இந்த உடற் பருமனை வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே குறைக்க முடியும். ஆம்! வீட்டில் கிடைக்கும் வெள்ளைப்பூண்டை வைத்தே உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் நம்புவீர்களா?

பருமனைக் குறைக்க பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

பூண்டு – 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி – ஒரு கோப்பை (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி (உடைத்தது)
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
மோர் – ஒரு கோப்பை
தண்ணீர் – 4 கோப்பை

செய்முறை:
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் போட்டு மூடி, 3 விசில் வந்தவுடன் இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம்.

மதிய உணவாகவும் இந்தக் கஞ்சியை நாம் உட்கொள்ளலாம். இதன் மூலம் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும். அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. மேலும், புற்று நோய் வருவது தடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *