• Sun. Oct 12th, 2025

சுடுநீரால் ஏற்பட்ட காயங்கள், தீக்காயங்களுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிப்பது எப்படி..?

Byadmin

Feb 22, 2018

(சுடுநீரால் ஏற்பட்ட காயங்கள், தீக்காயங்களுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிப்பது எப்படி..?)

அவசர அவசரமாக வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்துகின்றனர் இக்காலத்து இளைஞர்கள் மற்றும் யுவதிகள். இந்த அவசரம் காரணமாக சுடுநீரைக் கூட தங்களது கால் கைகளில் கொட்டிக்கொள்கின்றனர்.

ஆனால் அவற்றிற்கு எவ்வாறு வீட்டிலேயே மருந்து தயாரிப்பது என்பதை பலர் அறிந்திருப்பதில்லை. சுடுநீரால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தீக்காயங்கள் என்பவற்றை வீட்டிலிருந்தே எவ்வாறு சமாளிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.


01. கற்றாழை
கற்றாழை வலியைக் குறைப்பதுடன் பக்டீரியாக்கள் பரவுவதை தடுக்கின்றது. அத்துடன், வலியை நீக்குவதோடு வடுக்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றது.


02. பனிகட்டி பேக் அல்லது குளிர்ந்த நீர்
எரிந்த தோலை சுமார் 10-15 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் வைப்பது அல்லது அதன் மீது ஐஸ்கட்டி பேக் வைப்பது குணமாகும் செயற்பாட்டை வேகப் படுத்துவதுடன் வலியை குறைக்கவும் உதவுகிறது.


03. தேன்
தூய்மையான தேனில் அற்புதமான கிருமி நாசினிகள் உள்ளன. இதன் மூலம் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.


04. உப்பு கரைசல்
உப்பிற்கு இயற்கையாகவே காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. அத்துடன், பக்டீரியா தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.


05. வாழைப் பழ தோல்
புண்பட்ட பகுதியின் தோல் மீது அது கறுப்பாகும் வரை வாழைபழத் தோலை வைத்திருப்பதன் மூலம் வீக்கம் மற்றும் ஒவ்வாமை ஏற்படுவது தடு;கப்படுகின்றது.


06. பால்
பாலிலுள்ள கொழுப்பு, காயத்தை விரைவில் குணமாகும் வல்லமை கொண்டது. இதனால் காயம் விரைவில் குணமடையும். சிறு துண்டு துணியை பாலில் தோய்த்து காயத்தின் மீது பூசுவது உத்தமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *