• Sun. Oct 12th, 2025

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இந்த அற்புதமான பழம் மட்டுமே போதும்..!

Byadmin

Feb 23, 2018

(உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இந்த அற்புதமான பழம் மட்டுமே போதும்..!)

இப்போதுள்ள உணவுப் பழக்கவழக்கங்களால் எம்மில் பலர் பருமன் அதிகரிக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

எடையை குறைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் டயட்டிங் உடற்பயிற்சி என பல்வேறு உத்திகளை கையாண்டு சில சமயங்களில் சலித்துப் போவதுமுண்டு. ஆனால் இந்த பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய தீர்வு உண்டு என்றால் நம்புவீர்களா?

ஆம்! இதற்கு சப்போட்டா பழம் மூலம் தீர்வு காண முடியும். இந்த சப்போட்டா பழத்தை உபயோகித்து எவ்வாறு உடற்பருமனை குறைப்பது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
சப்போட்டா – 6
பால் – அரை கோப்பை
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு ஏற்ப
தேன் – சிறிதளவு

செய்முறை
பாலை நன்றாக காய்ச்சவும். பின்னர் ஆறியதும் குளிர வைக்கவும். சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றிக்கொள்ளவும். பின்னர் பால், தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து என்பவற்றை மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.

இந்த சப்போட்டா பானத்தை தினமும் அருந்துவதன் மூலம் உங்கள் எடை காணாமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *