• Sat. Oct 11th, 2025

ஷாமிற்கு (சிரியா) நற்செய்தி உண்டு..!

Byadmin

Feb 26, 2018

(ஷாமிற்கு (சிரியா) நற்செய்தி உண்டு..!)

“ஷாமிற்கு நற்செய்தி உண்டு” இந்த வார்த்தை அல்லாஹுவுடை தூதர் ஸல் அவர்களின் வார்த்தை. ஒரு காலும் இது பொய்யாகாது..!
ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..!
இப்போது வேண்டுமானல் ஷாம் அலக்கழிக்கபடலாம்..!
ஆனால்..! ஷாமிற்கென்று ஒரு நாளை, அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..! இன்ஷா அல்லாஹ்..!
ஷாம் தேசம் என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்
ஷாமின் சிறப்பை அறிவோம்..!
முஹம்மது ஸல் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாமும் தான்..!
அல்லாஹுவின் பர்க்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..!
நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..!
நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..!
அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..!
உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி சுஜூத் செய்ததும் ஷாமில் தான்..!
வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..!
வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..!
முஹம்மது ஸல் அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..!
பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..!
எட்டாயிரத்திற்கும் அதிகமான சஹாபாக்கள் சஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..!
உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..!
கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..!
முஹம்மது ஸல் அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்..!
அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..!
மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..!
ஈஷா அலை இறங்குவதும் ஷாமில் தான்..!
தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..!
மஹ்சர் பூமி ஏற்ப்படுவதும் ஷாமில் தான்..!
கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..!
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது. ஷாம் அழிக்கபடுகிறது என்று யாரு கவலை கொள்ளவேண்டாம். இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது
இப்போதைய நமது பணி ஷாமிற்கும் அம்மக்களுக்கும் அதிகம் பிராத்திப்பதே ஆகும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *