• Sat. Oct 11th, 2025

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பவரா..? விரைவில் உங்களை இவை தாக்க போகுதாம்..!

Byadmin

Mar 1, 2018

(நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பவரா..? விரைவில் உங்களை இவை தாக்க போகுதாம்..!)

சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.

நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.

தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும். மேலும் அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.

நாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.

மாரடைப்பு ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இனப்பெருக்க பிரச்சனை தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *