• Sat. Oct 11th, 2025

நீங்க உணவை வேகமாக சாப்பிடுபவரா..? அப்ப இது உங்களுக்கு தான்..!

Byadmin

Mar 1, 2018

(நீங்க உணவை வேகமாக சாப்பிடுபவரா..? அப்ப இது உங்களுக்கு தான்..!)

உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலர் உணவு வகைகளை வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள் அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதனால் உடல் குண்டாகி விடும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் 59,717 பேரிடம் இது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 2-ம் ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

சாப்பிடும் முறை, மது உபயோகிக்கும் அளவு, தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மெதுவாக சாப்பிடுபவர்களைவிட வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் குண்டாக இருப்பது தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *