(ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வந்தால் ஆதரவு வழங்குவோம்- JVP)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.க.யின் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தலைமையிலான குழு பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து பிமல் ரத்நாயக்கவிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷாக்களின் ஊழல் மோசடிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூடிமறைத்தார். பிரதான கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.