(கொழும்பு நகரில் சீனர்களது வியாபாரஸ்தலங்கள், கடைகள் அதிகரித்தது எப்படி? ஜனாதிபதி கேள்வி)
கொழும்பு நகரில் சீனர்களது வியாபாரஸ்தலங்கள், கடைகள் அதிகரித்து வருவது எவ்வாறு
என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகளின் பிரச்சினை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி கொழும்பு நகரில் சீனர்களது வியாபார நிலையங்கள், கடைகள் அதிக ரித்து வருகின்றன.
சீனாவிலிருந்து பொருட்களை நேரடியாக கொண்டு வந்து இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தாம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் சில்லறை வியாபாரிகள் முறையிடுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள் ளார்.
இவ்வாறு சீனர்களின் கடைகள் கொழும்பு நகரில் அதி கரிப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி உள்ளூர் சில்லறை வியாபாரிகள் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் அடுத்த வாரம் மாநாடொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதைக் கேள்வியுற்ற நான் அத்தகைய மாநாட்டை நடத்தாமல் என்னுடன் பேச வருமாறு அழைத்துள்ளேன். இவ் வாறு உள்ளூர் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் ஒரு மில்லியன் டொலர்களை முதலீடு செய்தால் வர்த்தக நிலையங்களை அமைக்க முடியும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த தொகை ஐந்து மில்லியன் டொலர்களாக மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.