• Sat. Apr 4th, 2026

இளநரை இல்லாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா..? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்..!

Byadmin

Mar 3, 2018

(இளநரை இல்லாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா..? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்..!)

தலைமுடியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பது ஆண் மற்றும் பெண் இருபாலாரினதும் விருப்பமாக உள்ளது. முடிஉதிர்தல் மற்றும் நரைமுடிதோன்றல் என்பன ஆரம்பித்துவிட்டாலே மனதுக்குள் போராட்டமும் ஆரம்பித்துவிடும்.

பொதுவாக நரைமுடி ஆங்காங்கே எட்டிப்பார்ப்பது முதுமையின் அறிகுறி என்பார்கள் நம் முன்னோர்கள். இருப்பினும், முன்பெல்லாம் எம் முன்னோர்களுக்கு நரைமுடி தோன்ற 70 வயது தாண்டியதை நாம்கேள்வியுற்றிருக்கிறோம்.

ஆனால் இப்போதோ,இளம்ஆண்கள் மற்றும் யுவதிகள் நரைமுடிகளோடு உலாவருகின்றதை நாம் காணக்கூடியதாக உள்ளது. 70 தாண்டி தோன்ற ஆரம்பித்த நரை தற்போது 20களிலேயே தோன்றுகின்றது என்பது கவலைக்குறிய விடயம்தான்.

ஏன் இளம்வயதினருக்கு இந்த நரை தோன்றுகின்றது? அதற்குமரபியல்காரணங்கள், புகைபிடித்தல், மதுஅருந்துதல், துரிதஉணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு மற்றும் பயோட்டின் ஊட்டச்சத்து குறைதல், போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

அதுசரி, இந்த இளநரையை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

01. தினமும் பால் அருந்துதல்
புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், கல்சியம், பயோட்டின், விட்டமின்டி என்பன பாலில் நிறைந்திருக்கின்றன. எனவே, தினமும் இருவேளை பாலை தவறாமல் குடிப்பதன் மூலம் இளநரையை தடுக்கலாம்.

02. முட்டை சாப்பிடுதல்
முடிவளர்ச்சியைத் தூண்டும் சத்துக்கள் முட்டையில் உள்ளமையால் ஒருநாளைக்கு இருமுட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து போன்றவை கிடைக்கின்றன. இதன் மூலம் நரை ஏற்படுவது தடுக்கப்படும்.

03. மீன் உட்கொள்ளல்
மீனில் உள்ள ஒமேகா-3 முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.
எனவே மீனை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

04. கீரைவகைகளை உட்கொள்ளல்
உயிர்ச்சத்துக்கள் நிரம்பிய பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை மற்றும் பசளிக்கீரை போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *