• Sat. Apr 4th, 2026

வன்முறையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்

Byadmin

Mar 6, 2018

திகன வன்முறையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்

திகன உட்பட  நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *