• Mon. Oct 13th, 2025

முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா? கவலை வேண்டாம்.. இதோ ஈசியான தீர்வு

Byadmin

Aug 8, 2025

முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா?கவலை படாதீர்கள் அதனை போக்குவதற்கு இருக்கவே இருக்கு இந்த வழிகள்! முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும். சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும். ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும். வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *