ஊழல்,மோசடிகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஜேவிபியின் கண்களில் இருந்து தப்பவே முடியாது.எல்லா மோசடிகள் சம்பந்தமான தகவல்களும் அவர்களிடம் உண்டு.
அவர்கள் அவ்வாறு அம்பலப்படுத்தியது கொஞ்சம்தானாம்.இன்னும் அம்பலப்படுத்துவதற்கு எவ்வளவோ உண்டாம்.
இரண்டு அரசுகளின் மோசடிகள் சம்பந்தமாகவும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கைகளில் 400இற்கு மேற்பட்ட பைல்கள் உள்ளனவாம்.
அது மாத்திரமன்றி மஹிந்த அரசில் இடம்பெற்ற ஊழல்,மோசடிகளை மூடி மறைப்பதற்காக இந்த அரசுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல்-வாங்கல்கள் தொடர்பான விவரங்களும் அவரின் கையில் உள்ளனவாம்.
அப்போ இந்த அரசுக்கும் ஆப்பு வைக்கப்போவது ஜேவிபிதான்போல.
-எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர் –