நாற்பதுகளில் இமாம் ஹஸனுல் பன்னா கெய்ரோ வீதியொன்றில் ஒரு உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.அவரது உரையை இடைமறித்த ஒருவர் இமாமவர்களே! நாம் சீர்திருத்தத்தை ஆட்சியாளரிலிருந்து துவங்குவதா? மக்களிலிருந்து துவங்குவதா எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பி பதிலளித்தார்கள்.
நீர் எங்கே வசிக்கிறாய்?
குறித்த ஒரு வீட்டுத் தொகுதியில்.
எத்தனையாம் மாடியில்?
மூன்றாம் மாடியில்.
நீங்கள் உங்களது மாடிக்கு ஏறுகின்ற படிகளை துப்பரவு செய்ய விரும்பினால் மேலிருந்து துப்புறவு செய்வீர்களா? கீழிருந்து துப்பரவு செய்வீர்களா?
மேலிருந்துதான் துப்பரவு செய்வோம்.
அதற்கு மாற்றமாக நடந்தால் என்ன நடக்கும்?
அப்போது அது சுத்தப் படுத்துவதாக அல்லாமல் அசுத்தப்படுத்தும் வேலையாக அமையும்.
ஆம் நீங்களே உங்களது கேள்விக்கு விடையளித்துவிட்டீர்கள். மக்களின் நிலை சீராக அதன் தலைமை சீர்படுத்தப்பட வேண்டும் என இமாமவர்கள் கூறி முடித்தார்கள்.
-கலாநிதி ஜாபிர் கமீஹா-