• Sat. Apr 4th, 2026

UNP வெற்றிபெற்ற நீர்கொழும்பு , காலி மாநகரசபை பொதுஜன பெரமுனவிடம் வீழ்ந்தது

Byadmin

Mar 23, 2018

(UNP வெற்றிபெற்ற நீர்கொழும்பு , காலி மாநகரசபை பொதுஜன பெரமுனவிடம் வீழ்ந்தது)

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ரோஸி பெர்ணான்டோவுக்கு 19 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 16 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
அதே நேரம் காலி  மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்து கொடகே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்துவுக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜிலித் நிஷாந்தவுக்கு 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் காலி மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 14 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 13 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *