(இதயத்தின் நண்பனான இஞ்சியை தினமும் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள்..?)
உடலில் உள்ள பெரும்பாலான பாகங்களின் செயல்பாடுகளுக்கு உற்ற தோழனாக இஞ்சி திகழ்வது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
உணவின் ருசியில் மாயவித்தையை ஏற்படுத்தும் நறுமணம் கொண்ட பொருள் இஞ்சி.
தேவைக்கு அதிகமாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மருத்துவ மூலிகை என்ற சிறப்பும் இஞ்சிக்கு உண்டு.
ஆனால் இஞ்சியிலுள்ள மகத்துவம் குறித்து அறியாமையிலேயே பலரும் உள்ளனர்.
உடலுக்கும் மூளைக்கும் தேவைக்கேற்ப நன்மை அளிக்கும் ஊட்டக்கூறு (நியுட்ரியன்ட்ஸ்) மற்றும் பயோ ஆக்டீவ் நிறைந்த ஒரு ஆரோக்கிய பெட்டகம் என்றே இதைச் சொல்லாம்.
இஞ்சியை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பல அறிவியலாளர்களும் ஆய்வு நடத்தி நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
தினந்தோறும் இஞ்சி உண்பதால் ஏற்படும் நன்மைகள்
* இதயத்தின் நண்பன்
இதயத்தின் பாதுகாப்புக்கும், சீரான செயல்பாட்டுக்கும் ஒரு உகந்த மருந்துப் பொருளே இஞ்சி. வெறும் 3 கிராம் இஞ்சியை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் கொழுப்பின் அளவு கணிசமாக குறையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த ஓட்டம் சீராவதுடன், மாரடைப்பு உள்ளிட்ட உபாதைகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும்.
* ஜலதோஷ நிவாரணி
ஜலதோஷத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்தும் தலைசிறந்த நிவாரணி இஞ்சி. ஆம், இஞ்சியிலுள்ள ஆண்டி ஆக்சிடன்ட் உடலில் ஊடுருவும் இன்ஃபெக்ஷன்களை தடுக்கும் ஆற்றல் நிறைந்தது.
* தலைசுற்று அவதி
கர்ப்பமான பெண்களில் பலருக்கும் ஏற்படும் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று தலைசுற்று. கர்ப்பகாலங்களில் காலை வேளையில் ஏற்படும் தலைசுற்று ஏற்படுவதிலிருந்து விடுபட இஞ்சி தண்ணீர் பருகினால் நன்மை அளிக்கும்.
* அஜீரணக் கோளாறு
உணவை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, சில அசைவ உணவுகளால் ஏற்படும் அஜீரணம் அகியவற்றிலிருந்து புத்துணர்ச்சி தரும் வல்லமை பெற்றது இஞ்சி.
மேலும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆற்றல் கொண்டது.
* தீராத தலைவலி
பலருக்கும் நீங்காத பிரச்னையாக தொடர்ந்து வரும் வியாதி தலைவலி, ஒற்றை தலைவலி.
மூளைக்கு செல்லும் இரத்தக் குழல்களில் காணப்படும் சுறுக்கங்கள் முதலியவற்றை சீர் செய்து தலைவலியில் இருந்து விடுதலை தருகிறது.
* உடல் எடையை குறைக்க
உடல் எடை அதிகமாக உள்ள பலரும், எடை குறைத்தே தீர வேண்டும் என பல முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பார்கள்.
காலையில் எழுந்தவுடன் இஞ்சியை உட்கொள்வது, அல்லது இஞ்சியை சுடு தண்ணீரில் கலந்து அருந்தி வருவதால் பசியை குறைக்கும்.
வெறும் வயிற்றில் இஞ்சி உண்பதன் மூலம் 40 சதவீதம் வரை கொழுப்பு கலோரியை எரிக்கும்.
இது மட்டுமல்லாது, நல்ல உறக்கம், வாய் துர்நாற்றம் உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்தும்.
‘இஞ்சிக்கு எரிப்பு கொண்டாட்டம், எலுமிச்சம் பழத்துக்கு புளிப்பு கொண்டாட்டம்’ என்ற பழமொழிக்கு இணங்க இனியும் இஞ்சியை எரிச்சல் காரன் என்று ஒதுக்காமல் சீரான வாழ்வை பெற தாராளம் உண்ணுங்கள்.