• Sun. Oct 12th, 2025

கோடையில் அதிகமாக சாப்பிடும் வெள்ளரிக்காயில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா..?

Byadmin

Apr 6, 2018

(கோடையில் அதிகமாக சாப்பிடும் வெள்ளரிக்காயில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா..?)

வெப்ப காலம் ஆரம்பித்ததும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது வெள்ளரிக்காய்.

இவை எல்லா காலப் பகுதிகளிலும் கிடைத்தாலும்,வெப்பகாலத்தில் நம் உடலிற்கு அதிகளவு நன்மையை தருகின்றது.

சூரிய வெப்பத்தினால் சருமம் பாதிப்படைவைதை தடுப்பதுடன்,உடலில் நீர்சக்தியை அதிகரித்து எலக்ட்ரோலைட்டை சமநிலையில் பேனுகின்றது.

மேலும் இவை உணவுகளில் சுவையூட்டியாகவும் பயன்படுகின்றது.

வெள்ளரிக்காய் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இலகுவாக கிடைக்கின்றது, இவை நம்ப முடியாத பல நன்மைகளை செய்கின்றன.

வெள்ளாரிக்காயின் மருத்துவ குணங்கள்

1. விட்டமின்கள்

வெள்ளரிக்காயில் உள்ள விட்டமின் சி,பி,மற்றும் ஏ உடலிற்கு சக்தியை வழங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

2. கனியுப்புக்கள்

வெள்ளரிக்காயில் செறிந்துள்ள மக்னீசியம்,பொட்டாசியம்,சிலிக்கன் போன்ற கனியுப்புக்கள் உடலை ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றது.

3. நச்சுத்தன்மையை நீக்குதல்

வெள்ளரிக்காய் உள்ள அதிக்கப்படியான நீர் உடலில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை அகற்ற உதவுவதுடன்,சிறுநீரகக் கற்களை இலகுவாக கரைத்து விடுகின்றன.

4. உடல் எடை குறைதல்

வெள்ளரிக்காயில் குறைந்தளவு கலோரியும்,அதிகளவு நீர்த்தன்மையும் இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகின்றது.

5. சமிபாட்டை சீராக்கும்

வெள்ளரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் சமிபாட்டிற்கு உதவுவதுடன் மலச்சிக்களை தடுக்கின்றது.

6. நீரிழிவு,இரத்த அழுத்தம்,கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.

இதில் உள்ள மக்னீசியம்,நார் பொருட்கள்,பொட்டாசியம்இரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் கொழுப்பை குறைக்கின்றது.

இவற்றில் காணப்படும் ஹார்மோன்கள் கணையத்தை தூண்டுவதன் மூலம் இன்சுலினை அதிகளவு சுரக்கச் செய்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றது.

7. உடலை ஈரப்பததுடன் வைத்திருத்தல்

நீர்ச் சத்து அதிகம் காணப்படுவதனால் உடல் வறட்சி அடையாமல் தடுத்து உடல் ஆரோக்கியத்தை பேனுகின்றது.

8. சிறுநீரகத்தை பாதுகாத்தல்

வெள்ளரிக்காய் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தை பாதுகாக்கின்றது.

9. மூட்டுக்களின் ஆரோக்கியம்

மூட்டுக்கள் அதனை சுற்றியுள்ள திசுக்களின் ஆரோக்கியத்திற்கு சிலிக்கன் முக்கியமானது. இது வெள்ளரிக்காயில் அதிகளவு காணப்படுகின்றது.

10. கருவளையத்தை நீக்குதல்

வெள்ளரிக்காய் துண்டுகளை கண்ணில் வைப்பதன் மூலம் கருவளையத்தை நீக்க முடியும்.

11. நகம்,முடியை வலிமைப் படுத்தும்.

இதில் உள்ள சல்பர் மற்றும் சிலிக்கன் முடி,நகப்பகுதிகளை வலிமைப்படுத்தி வளரச் செய்யும்.

வெள்ளரிக்காயில் தாயாரிக்கப்படும் சுவையான உணவு

தேவையான சேர்மானங்கள்

• சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் – 2கப்

• நறுக்கப்பட்ட வெங்காயம் – ¼ கப்

• நறுக்கப்பட்ட பார்ஸலி – 2 தேக்கரண்டி

• சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட தக்காளி – ½ கப்

• நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலை – சிறிதளவு

• விதை நீக்கி வெட்டப்பட்ட மிளகாய் – 1

• நறுக்கப்பட்ட பூண்டு – 1

• தயிர் – ¼ கப்

• எலுமிச்சப்பழச் சாறு – 1 ½ தேக்கரண்டி

• நற்சீரகம் -1/4 தேக்கரண்டி

• உப்பு – ¼ தேக்கரண்டி

செய்முறை

முதல் ஏழு சேர்மானங்கள் ஒரு பாத்திரத்திலும், கடைசி நான்கு சேர்மானங்கள் வேறு பாத்திரத்தில் எடுத்து, தனித்தனியாக இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இறுதியில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஆரோக்கியமான வெள்ளரிக்காய் உணவை பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *